நாம் வாழும் இப்பூமி மற்றும் அண்டவெளி யாவும்
தன்னில் தானாக உண்டானதோ அல்லது படைக்கப்பட்டதோ ( இதற்கான விடையே இன்னும் அறியப்படவில்லை....
அது குறித்து பேசக் கிளம்பினால் வாக்குவாதம் நீண்டுகொண்டே செல்லும். எனவே இதை உங்களிடமே விட்டு விடுகிறேன்..
அனைவரும் ஏற்கக்கூடிய விடை இருப்பின் கூறவும்.)
எதுவாக இருப்பினும்,
அவ்வாறு இவ்வுலகம் உருவானபோது எவற்றையெல்லாம் தன்னுள்ளே கொண்டிருந்ததோ
இன்றுவரை அதைமட்டுமே கொண்டுள்ளது என்றே நான் நம்புகிறேன்..
இவ்வுலகில் எவரும் எதையும் புதிதாக உருவாக்கிடவும் இல்லை, எதையும் இல்லாமல் செய்திடவும் இல்லை..
அவ்வாறு உருவாக்கவும், இல்லாமல் செய்திடவும் நம்மால் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை..
நாம் இங்கிருப்பவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளும்பொருட்டு
அதை உருமாற்றத்திற்கு உட்படுத்துகிறோமே தவிர
வேறெதையும் செய்வதில்லை..
ஏற்கனவே இங்கிருந்துகொண்டிருந்த ஒன்று பெரும்பான்மையானவர்களால்
உணரப்படாமல் இருந்தபோது, நம்மின் நடுவிலிருந்த ஒருவரால் உணரப்பட்டதை
கண்டு பிடிக்கப்பட்டது என கூறுவதைவிட " கண்டுணரப்பட்டது"
என கூறுவதே பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்..
அதாவது Invented by என்று கூறுவதை விட Discovered by என்று சொல்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்..
இக்கருத்தும் நான் உணர்ந்ததால் (சில பல வருடங்களாக) தோன்றியதேயல்லாமல் புதியதாக ஒன்றும் கூறிடவில்லை...
இவ்வுலகம் எவ்வாறு உருவாகி இருக்கும், இதன் தொடக்கம் எது? முடிவு எது?
என மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து,மண்டை காய்ந்து குழம்பியபோது தோன்றியதுதான் நான் மேலே சொன்னது..
இன்னும் நிறைய சொல்ல நினைத்தும் சொல்லாமலே முடித்துகொள்கிறேன்..
இல்லையென்றால் நான் ஏதோ "ஒரு மாதிரி " என மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்கள்...